260. அருள்மிகு முருகநாதேஸ்வரர் கோயில்
இறைவன் முருகநாதேஸ்வரர்
இறைவி ஆவுடைநாயகி
தீர்த்தம் ஆவுடை தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருமுருகன்பூண்டி, தமிழ்நாடு
வழிகாட்டி திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அவிநாசிக்கு அருகில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tirumuruganpoondi Gopuramசூரபத்மனைக் கொன்ற தோஷம் நீங்க, முருகக் கடவுள் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். அதனால் இத்தலம் 'திருமுருகன்பூண்டி' என்று பெயர் பெற்றது. இத்தலத்து மூலவரும் 'முருகநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'முருகநாதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஆவுடை நாயகி', 'முயங்குபூண்முலையம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பஞ்ச லிங்கம், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், துர்க்கை, சண்டேஸ்வரர், சண்டேஸ்வரி, நடராஜர், சூரியன், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.

Tirumuruganpoondi Muruganகோயிலின் உட்பிரகாரத்தில் முருகப்பெருமான் தனது வேலினால் உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது. முருகப்பெருமான் சன்னதியில் அவர் வழிபட்ட லிங்க மூர்த்தியும் உள்ளார்.

சேரமான் பெருமான் நாயனார் கொடுத்த பொருட்களை எடுத்துக் கொண்டு சுந்தரர் இத்தலத்திற்கு அருகில் வந்துக் கொண்டிருந்தபோது, சிவபெருமான் ஏவலால் பூதகணங்கள் வேடுவர்கள் வடிவத்தில் வந்து பறித்துக் கொண்டுச் சென்றன. சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பதிகம், சிவபெருமான் அவைகளை மீண்டும் கொடுத்து அருளினார்.

துர்வாச முனிவருக்கு சிவபெருமான் பிரம்மதாண்டவக் காட்சி காட்டியருளிய தலம்.

மனநிலை சரியில்லாதவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்கி, வழிபட்டு நலம் பெற்றுச் செல்கின்றனர்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com